Thursday, March 6, 2008

இன்றும் தொடரும் ஆதிக்கம்

இன்று காலை மாம்பலம் ரயில் நிலையத்தில் நான் கண்ட சம்பவம். ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் பெஞ்சில் அமர்ந்து இருந்தார். அவர் ஏதாவதொரு அலுவலகத்தில் கடை நிலை பணியாளராக இருக்க வேண்டும் என்று நான் யூகித்தேன். பின்னர் அது உண்மை என நான் தெரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் முப்பது வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவர் (குறிப்பு: நெற்றியில் சிகப்பு நிற கோட்டை அணிந்து இருந்தார்) அந்த பெரியவரை பெயர் சொல்லி (சண்முகம்) அழைத்தப்படி வந்தார். அந்த இளைஞர் அவருடைய மேலதிகாரி இருக்க வேண்டும். இந்த வாரம் ஞாயிற்று கிழைமை (நேற்று) நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பபார்த்தேன். ஏன் வரவில்லை? என்று கேட்கிறார். அதற்கு அந்த பெரியவர் வேறு வேலைகள் இருந்ததால் வர முடியவில்லை என்று பதிலளித்தார். இதற்கிடையில் பெரியவரிடம் ஒரு கவர் ஒன்றை கொடுத்தார். அந்த நேரத்தில் மின் தொடர் வண்டி வர, அடுத்த வாரம் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒரு உத்தரவை போல சொல்லி விட்டு போனார். அவர் அந்த பக்கம் போனதும், அருகிலிருந்த என்னிடம் அந்த பெரியவர் திரும்பி, சலிப்புடன் ஞாயிற்று கிழைமை கூட வேலை செய்தாக வேண்டும். அதும் ஆபீஸ் வேலை என்றால் கூட பரவாயில்லை, அவருடைய வீட்டில் உள்ள காரை கழுவுவது, அவருடைய குழந்தைகளை விளையாட அழைத்து சென்று, அழைத்து வருவது போன்ற வேலைகளை விடுமுறை நாட்களில் செய்யவேண்டும். மறுத்தாலோ அல்லது போகாமல் இருந்தாலோ அலுவல நாட்களில் வேணுமென்றே அலுவலகத்தை சரியான நேரத்தில் பூட்ட விடாமல், நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு புறப்பட்டு செல்வார். இந்த நேரத்தில் ஆபீஸ் வேலையை பார்ப்பாரா என்றால் அதுவும் கிடையாது. கம்ப்யூட்டரில் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய அண்ணனோடு அல்லது அக்காவோடு பேசிக் கொண்டிருப்பார். இவ்வளோ சீக்கிரம் போய் என்ன செய்வார்?னு நினைக்கிறீங்க. பேகில் வைத்திருக்கும் புக்ஸ் எல்லாத்தையும் உக்காந்து படிப்பார். அப்புறம் தான் ஆபீஸ் வேலை. பேசிக்கொண்டு போனவரிடம் நான் இடை மறித்து, நீங்க ஆபிஸ் போகலியா? என்று கேட்டேன். அவருடைய வீட்டிற்கு இன்று கரண்ட் பில் கட்ட சொல்லி இருந்தார். அதனால் தான் இங்க வந்து அவருக்காக காத்திருக்கேன். அந்த நேரத்தில் நான் செல்வதற்கான மின் தொடர் வண்டி வந்ததால், அவரிடம் நான் விடை பெற்றேன் . பயணத்தின் போது இந்த நிகழ்ச்சி குறித்தே என் மனம் சிந்தித்து வந்தது. காலங்காலமாக ஏதோவொரு வகையில் ஒரு பகுதி மக்களை, இன்னொரு பகுதி மக்கள் அடிமைகளாக நடத்திக்கொண்டு வருகிறார்கள். பணக்காரன் ஏழையை, முதலாளி தொழிலாளியை என உலகத்தின் ஒரு பகுதியின் மீது ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. பாரதிதாசன் எழுதியதை போல் ஓடப்பரெல்லாம் உதையப்பர் ஆனால் மட்டுமே இந்த இழிநிலையிலிருந்து சமூகம் தன்னை தானே காத்து கொள்ள முடியும்

விடுப்பட்டவைகள்

வாஞ்சிநாதன் குறித்த என்னுடைய கட்டுரையில் சில பகுதிகள் விடுபட்டுள்ளன. வாஞ்சிநாதன் துவக்கிய பாரத மாதா சங்கத்தில், பிராமனர்களோடு வெள்ளாள இளைஞர்களும் இணைந்து தொண்டு(?) ஆற்றியுள்ளனர். அந்த காலத்தில் பிராமினர்களுக்கு இணையானவர்கள் என காட்டிகொள்ள அவர்களை போலவே இவர்கள் நடந்து கொண்டுள்ளனர். மேலும் வாஞ்சிநாதன் தன்னுடைய கடிதத்தில் ஆங்கிலேயர்கள் பஞ்சர்மகளை ஆட்சியில் அமர்த்தி விடுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார். (அட பாவிங்களா, உழைக்கிறவன் நாட்டை ஆள கூடாதா?. இதை விவேக் ஸ்டைலில் படிக்கவும் ). ஆஷ் துரை கொல்லப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். இன்னும் பாடபுத்தகத்தில், வாஞ்சிநாதன் தியாகியாக சித்தரிக்க படுவதை என்னவென்று சொல்வது?.

வாஞ்சிநாதன்

சமீபத்தில் நண்பர் இந்தியன் சாப்ளின் அவர்களின் வலைப்பூவில் வாஞ்சிநாதன் பற்றிய கட்டுரை படித்தேன். சுதந்திர போராட்ட தியாகியாக சொல்லப்பட்டுவரும் வாஞ்சிநாதனின் மற்றொரு முகத்தை அதில் குறிப்பிட்டிருந்தார். ஆஷ் துரையின் மரணம், சாதி வெறி பிடித்த காட்டு மிராண்டி மனிதர்களின் இழிவான வெற்றி என்பதை அதன் மூலம் உணர முடிந்தது. திருநெல்வேலி ஆட்சியாளராக பதவியேற்ற நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தியுள்ளார். தன்னுடைய அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உணவு அருந்த வேண்டும், ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும், குற்றால அருவியில் கடவுளும், கடவுளுக்கு அடுத்த படியாக பிராமிணர்கள் மட்டும் குளிக்கலாம் என்ற மரபை உடைத்தெறிந்து விட்டு அனைத்து மக்களும் குளிக்கலாம் போன்ற உத்தரவுகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் அவற்றை முன்னின்று நடத்தியும்உள்ளார். இது போதாது அவரை கொலை செய்ய? உழைக்கும் மக்களை சுரண்டி, ஏமாற்றி தின்று திண்ணைகளில் தூங்கியும், பொழுது போகாத பிராமின இளைஞர்கள், ஆஷ் துரையை எதிர்ப்பதர்க்காக உருவாக்கிய சங்கம் தான் "பாரத மாதா சங்கம் " தலைமை வாஞ்சிநாதன். இதற்கெல்லாம் சிகரம் வைத்த சம்பவம் ஒரு அருந்திய பெண்ணை, பிரசவத்தின் போது அக்கிரகாரத்தின் வழியே மருத்துவ மனைக்கு செல்ல அனுமதிக்காதது தான். அந்த வழியே வந்த ஆஷ் துரையும் அவரது மனைவியும் தங்கள்வண்டியிலேயே பிராமிணர் தெரு வழியே மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த செயல் மூலம் வெறுப்பின் உச்சத்திற்கே சென்ற பிராமின இளைஞர்கள் ஆஷ் துரையை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இது குறித்து வாஞ்சிநாதன் கடிதம் ஒன்றையும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் அருந்திய பெண்ணை அக்கிரகாரத்தின் வழியே அனுப்பியதன் மூலம் இந்து மதத்திற்கு தீங்கு விழைவித்ததாகவும், இந்து மதத்தின் சானாதன தர்மத்தை, மாமிசம் உண்ணும் மிலேச்சனான வெள்ளைக்கார ஆஷ் துரை கெடுத்துள்ளதால் அவரை கொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (இது அந்த கடிதத்தின் சுருக்கம் தான்) . இதன் பொருட்டே ஆஷ் துரை மணியாட்சி ரயில் நிலையத்தில் வாஞசிநாதனால் சுட்டு கொல்ல பட்டார். வீரன் (என்று சொல்லப்படும் ) வாஞ்சிநாதன் அவர்களும் தன்னை தானே சுட்டு கொண்டார். ஒரு ஆங்கிலேயனை சுட்டு கொன்ற ஒரே காரணத்தினால் தியாகி பட்டம் கிடைத்து விட்டது. உண்மையில் தீண்டாமை எதிர்ப்பு போரில் இறந்து போனதற்கு நாம் ஆஷ் துறைக்கு தான் அஞ்சலி செலுத்த வேண்டும். இந்த கட்டுரை படித்து முடிக்கும் போது எனக்கு தோன்றியது " அக்கிராகரங்கள் இருக்கும் வரை அக்கிரமங்கள் தீராது என்பது தான்.